நோய் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வானிலை மாறும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் நமக்கு வரும். அதனை உணவின் மூலம் நாம் சரி செய்ய முடியும். அதில் இந்த வெயில் காலத்தை நாம் சமாளிக்க உடம்புக்குத் தேவையான சத்துக்களை பெற சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் ஏராளமான தண்ணியை குடிக்க வேண்டும். சூடான நீரை குடிப்பது விரைவில் நிவாரணம் தரும். உங்கள் உணவில் பூண்டு மிளகாய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பூண்டு உடலுக்கு சூடான உணவாக இருப்பதால் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. மிளகாயில் காப்சின் என்னும் பொருள் உள்ளதால் தொற்று ஏற்படுத்துவதை கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவது மிகவும் நல்லது. உணவில் முட்டை, தயிர் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட உணவை பயன்படுத்தினால் நல்லது. தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் நாம் நம் உடலை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ள முதலில் உணவில் சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியமான ஒன்று.