Categories
தேசிய செய்திகள்

நோய்த் தொற்றில் இருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்கிறேன்… பாகிஸ்தான் பிரதமரின் மகள்..!!

இந்தியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என பாகிஸ்தான் பிரதமரின் மகள் மரியம் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் கூறியுள்ளதாவது : “இதயத்தைத் துளைக்கும் காட்சிகள் இந்தியாவில் இருந்து வருகிறது.

அல்லா நம் அனைவருக்கும் கருணை காட்டட்டும். நான் இந்த தொற்றுநோய் வென்றெடுத்து பின்னர் தெற்காசியாவில் அமைதியை நோக்கி செயல்படுவோம். இரு நாடுகளும் தங்கள் மக்களுக்கு சுகாதாரம் கல்வி மற்றும் சிறந்த வாழ்க்கையை அளிக்கும் என நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |