கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் மொட்டை மாடியில் ஒன்றுக்கூடி கபடி விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1000- திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர், விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கோல்டன் ஜூபிலி விடுதியில் 150 -ற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த விடுதியின் மொட்டை மாடியில் கூடிய கொரோனா நோயாளிகள் நோய் தொற்று குறித்து சிறிதும் அச்சமின்றி கபடி விளையாடியுள்ளனர். இது குறித்த வீடியோ வைரலான நிலையில் சிதம்பரம் வட்டாச்சியர் ” ஹரிதாஸ் ” விசாரணை மேற்கொண்டுள்ளார்.