Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய்யெதிர்ப்புசக்தி அதிகரிக்க …. இதையும் சாப்பிடுங்க..!!

முந்திரியால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நம் உடலுக்கு எவ்வாறு முந்திரி பயன்படுகிறது என்பதை இப்போது காண்போம்.

முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? முந்திரியில் விட்டமின் டி அதிகம் உள்ளது. இதில் மன அழுத்தத்திலிருந்து வெளிவர மிகவும் உதவுகிறது. இன்றைய அன்றாட வாழ்வில் மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. போட்டி மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைகளால் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த நிலையில் முந்திரியை அரைத்து தேனுடன் கலந்து சாப்பிடுவதின் மூலமாக மனச்சோர்வில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம். முந்திரியில் உள்ள மெக்னீசியம் நம் உடலில் செரடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது. முந்திரியில் உள்ள செரடோனின் என்னும் கெமிக்கல் நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. இதிலுள்ள காப்பர் நொதி செயல்பாடு ஹார்மோனை உற்பத்தி செய்து மூளை செயல்பாட்டை சீராக வைக்க உதவி செய்கிறது.

முந்திரியின் நன்மைகள் : 

1. முந்திரியில் மோனோசாச்சுரேட்டட் என்ற கொழுப்பு உள்ளது. இது இதய நோய்கள் வராமல் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

2. முந்திரியில் உள்ள பாலை முகத்தில் தடவி வந்தால் முகம் மிக அழகாகவும் மென்மையாகவும் மாறும்.

3. இந்த முந்திரியை தினமும் சாப்பிட்டு வருவதால் முடி உதிர்வு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

4. இதுமட்டுமில்லாமல் முந்திரியில் விட்டமின் ஈ செலினியம் மற்றும் ஜிங்க்  போன்ற நன்மை தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக முந்திரி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும் இது மிகவும் பயன்படுகிறது.

Categories

Tech |