Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நோய்வாய்ப்பட்டு இறந்த வாத்துகள்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அற்பிசம்பாளையம் கிராமத்தில் பிரபு(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா, கார்த்திகா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வாத்துகள் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பிரபு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பிரபுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |