Categories
தேசிய செய்திகள்

நோய்வாய்ப்பட்ட மனைவி… ஆம்புலன்ஸ் இல்லை… தள்ளுவண்டியில் கணவர் கொண்டு சென்ற அவலம்..!!

குடும்பத் தகராறில் காயமடைந்த தனது மனைவியை தள்ளு வண்டியில் அழைத்து மருத்துமனைக்கு கொண்டு சென்ற சோகம் பஸ்தி மாவட்டத்தில் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், கூலி வேலை பார்த்து வருகிறார்.  நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை தள்ளு வண்டியில் ஏற்றிக்கொண்டு சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்ற அவலம் தினேஷ் குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர்  கூறியபோது, “வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக என் சகோதரர் எனது மனைவியை அடித்து விட்டார். இதனால் அவர் காயமடைந்தார். அதன்பின்னர், வழக்குப் பதிவு செய்ய எனது மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றேன்.

அங்கு, எனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று காவலர்கள் கூறினார்கள். ஆனால், அவர்கள் ஆம்புலன்ஸ் எதும் ஏற்பாடு செய்துத் தரவில்லை. இதனால் தள்ளு வண்டியில் என் மனைவியை அழைத்துச் சென்றேன்” என்று கூறினார். இதுபற்றி காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால், ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |