Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…”கோடை வெயிலுக்கு இதமான இந்த ஜூஸ குடிங்க”… ரொம்ப நல்லது…!!

அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக, உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய இயற்கை உணவாக கருதப்படும் எலுமிச்சை பழம், புதினா, இஞ்சியை வைத்து அருமையான ருசியில் இந்த ஜூஸ்ஸ செய்து குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும், உடம்பிலுள்ள வெப்பத்தை தணிக்கவும், எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ஜூஸ் பெரிதும்உதவுகிறது.

லெமன் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

எலுமிச்சை– 1.

நாட்டுச் சர்க்கரை – ருசிக்கேற்ப.

புதினா – 2 டீஸ்பூன்.

இஞ்சி – 2 துண்டு.

உப்பு – சிறிதளவு.

தண்ணீர் – 300 மில்லி லிட்டர்.

செய்முறை:

புதினா இலைய மட்டும் தனியா ஆய்ஞ்சி எடுத்து, தண்ணீர்ல நல்லா கழுவி எடுத்துக்கணும். பிறகு இஞ்சிய தண்ணீர்ல கழுவிட்டு, தோலை நல்லா சீவினபிறகு, துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும். எலுமிச்சைப்பழத்தை இரண்டு துண்டா வெட்டி சின்ன பாத்திரத்துல பிழிந்து சாறு எடுத்துக்கணும். பின்னர் மிக்சிஜாரில் நறுக்கி வச்ச இஞ்சி துண்டு, ஆய்ஞ்சி எடுத்த புதினா, தண்ணீர ஊற்றி நல்லா மையாக அரைச்சி எடுத்து ஒரு பாத்திரத்தில வடிகட்டிக்கணும். வடிகட்டி வச்ச ஜூஸ்ல, நாட்டுச்சர்க்கரை, பிழிஞ்சி வச்ச எலுமிச்சைச்சாறை ஊற்றிய பிறகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கணும். கடைசியில கலக்கி வச்ச ஜூஸ கிளாஸிலோ அல்லது பவுல்யோ ஊற்றினதுக்குபிறகு, ஐஸ்கட்டிகளை போட்டு பரிமாறினால்ருசியான லெமன் மின்ட் ஜூஸ் தயார்.

Categories

Tech |