உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி மிளகு உடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்கு வந்து சேரும்.
எந்தவிதமான நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. அவற்றை செயல்பட வைக்க சில டிப்ஸ்களை இதில் நாம் தெரிந்து கொள்வோம். துளசி ஆண்டிவைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் காலை 5 துளசி இலையுடன் மூன்று மிளகு சேர்த்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.