தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உடம்பில் தேவைக்கு அதிகமான சக்திகள் இருக்கும் போதுதான் பல நோய்களை நாம் எதிர்த்து போராட முடியும். அதற்கான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.
தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா நல்ல பலன் தரும். இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும்.