இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கான கலந்தாய்வு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமெடுத்து வருவதால் பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்த கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த கலந்தாய்வில் தடுப்பூசி போடப்படும் பணிகள் குறித்தும் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறித்துள்ளார்.