மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக நாராயணசாமி தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக வைரஸ் தொற்று உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 47 சதவிகித மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொரோணா பரவல் வேகம் எடுத்து வருவதற்கு முதலமைச்சரும் கவர்னரும் பொறுப்பேற்க வேண்டும். ஜிப்மரில் சிகிச்சை பெறும் நோயாளிகள் முன்பதிவு பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் யாரிடமும் சொல்லிவிட்டு வருவதில்லை முன்பதிவு பெறுவதற்கு. எனவே அந்த விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இலங்கை அரசு இந்தியர்களை மதிப்பதில்லை என்பதை மீனவர்கள் பிரச்சனையில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். மேலும் ஐபிஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான மத்திய அரசின் புதிய விதிமுறை மாநில அரசால் ஏற்றுக்கொள்ள முடியாத விதமாக உள்ளது. அதாவது மாநில அரசுகளின் கீழ் செயல்பட்டு வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மத்திய அரசின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாநில அரசு ஒத்துழைக்காத பட்சத்தில் அதிகாரம் மத்திய அரசின் கைகளுக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. இவ்வாறு சின்ன சின்ன சட்ட திருத்தங்கள் மூலம் மத்திய அரசு மாநிலங்களில் அதிகாரத்தைப் பறித்து சர்வாதிகார போக்கை நடைமுறைப் படுத்துகிறது. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகும் இவ்வாறு மத்திய அரசு நடந்து கொள்வதால் மாநிலங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு மாநில அரசு டம்மி ஆக்கப்படும். மத்திய அரசின் இந்த நடைமுறையை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்.!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.