கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறையூரில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோசப் கல்லுாரி பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆகாஷ் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நோவா சாதனை பதிவுக்காக 1 நிமிடத்தில் 77 முறை சிட்-அப்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலையில் நடைபெற்ற சாதனை நிகழ்வுக்கு பிறகு ஆகாஷுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Categories