Categories
சினிமா தமிழ் சினிமா

“நோ டவுட்” விஜய் சினிமாவில் சூப்பர் ஸ்டார் தான்…. தயாரிப்பாளர் தில் ராஜு …!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  ஃபர்ஸ்ட் சிங்கிள்,  செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் இந்த திரைப்படத்தின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது விஜய் சினிமா மற்றும் ரியல் வாழ்க்கையில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான், இதில் டவுட்டே வேண்டாம் என தயாரிப்பாளர் தில் ராஜூ ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் பேசினார். படத்தை பற்றி ஒரு 30 நிமிடம்தான் கதை சொன்னோம். அவர் கதை நன்றாக இருக்கிறது நிச்சயம் பண்ணுவோம் என்று உறுதியளித்தார். இது தெலுங்கு படமா? தமிழ் படமா? என்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது. இது பக்கா ஒரு குடும்ப படம் என்று விளக்கமளித்தார்.

Categories

Tech |