பிரபல நாட்டு பெண்ணிற்கு 2 இந்திய வாலிபர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
தென்கொரியாவை சேர்ந்தவர் மியோச்சி என்ற பெண். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு தெருவில் யூடியூப் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் இந்த பெண்ணிடம் பைக்கில் லிப்ட் கொடுக்கவா என கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் நோ நோ என கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். இதனையடுத்து ஒரு வாலிபர் அந்த பெண்ணிற்கு முத்தமிட முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் போலீசார் அந்த வாலிபர்களை கைது செய்தனர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது. துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இதனால் போலீசார் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தூரதக ரீதியிலான பிரச்சனையாக மாறினால் கொரிய தூதரகம் எங்களை அணுகினால் நிச்சயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணும் என கூறியுள்ளார்.