Categories
பல்சுவை

நோ ரிஸ்க்…. கொட்டும் வருமானம்…. இதுதான் அந்த ரகசியம்….!!!!

உங்கள் வயது, உங்கள் முதலீடு, நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க் எதிர்பார்க்கும் லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கனக்கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வசதிகள் உள்ள ஒரே துறை மியூச்சுவல் பண்டு தான். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையுடன் தொடர்பு கொண்டு செயல்படுபவை. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருவாயும் ஏறி இறங்கும்.

பங்குச் சந்தை என்றாலே ரிஸ்க் என்ற பயம் பொதுவாக இருக்கும். நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழக்க விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் கொடுக்கும் பணத்தை திறமையாக முதலீடு செய்ய அனுபவமிக்க மேனேஜர்கள் இருப்பார்கள். இதன் மூலம் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் பங்குச் சந்தை மூலம் லாபம் சம்பாதிக்க முடியும். இதையடுத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் லப்சம், சிப் என இரண்டு வகையான முதலீட்டு முறைகள் உள்ளன.

லப்சம் என்பது ஒரே தவணையில் 10,00,000-ல் இருந்து 1 கோடி ரூபாய் என பெரிய தொகையாக முதலீடு செய்வது. எனினும் இந்த முறையில் அனைவரும் முதலீடு செய்துவிட முடியாது. இதற்காகத்தான் சிப் உள்ளது. சிப் என்பது ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் முதல் சிறிய தொகையாக தொடர்ந்து மாதந்தோறும் முதலீடு செய்வதுதான். கூட்டு வட்டி மூலம் நீண்ட கால அடிப்படையில் முதலீடு ஒரு நல்ல லாபத்தை தரும்.

Categories

Tech |