நடிகர் அஜித்தை பகத்சிங் போல் சித்தரித்து அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது . இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற அஜித் ரசிகர்கள் அவரை புகழும் விதமாக வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அறியாது என்ற வாசகங்களோடு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர் . அதில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல் அஜித்தை சித்தரித்துள்ளனர். இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்களைப் போன்று தனது படத்தை சித்தரிக்க வேண்டாம் என்று சமீபத்தில் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். அவரை போலவே நடிகர் அஜித்தும் இது போன்ற விஷயங்களை விரும்பாத நிலையில் அஜித் ரசிகர்கள் இப்படி போஸ்டர் அடித்து இருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.