Categories
சினிமா தமிழ் சினிமா

பகத் பாஸில் – நஸ்ரியா காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி தெரியுமா….? இதோ சுவாரசியமான கதை…!!!!!!!!!!

மலையாளத் திரைப்பட இயக்குனரான பாசிலின் மகன் பகத் பாஸில்.   சிறு வயது முதலே  இவருக்கு திரைப்படத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஆனாலும் தந்தையின் உதவி இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் சிறந்த நடிகராக வலம் வருகின்றார். அதேபோலத்தான் நஸ்ரியாவும் மிகவும் சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்து வந்தது. பள்ளி பருவம் முதலில் தொலைக்காட்சிகளில்  தொகுப்பாளராக பணிபுரிந்து  பின் சினிமாவுக்கு வந்துள்ளார். இதில் இரண்டு பேரும் இணைந்த சுவாரசியமான கதையை இங்கே காண்போம். 2014ஆம் ஆண்டு இயக்குனர் அஞ்சலி மேனனின் பெங்களூர் டேஸ் திரைப்படத்தில் நஸ்ரியாவும் பகத்பாஸிலும் முதலில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தியா முழுக்க இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இந்த படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தார்கள். மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக இருந்தது. பெங்களூர் டேஸ் படப்பிடிப்பின்  போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பகத்தை நஸ்ரியா கண்டு கொள்ளவே மாட்டாராம். ஆனால் பகத் எப்படியாவது அவருடைய கவனத்தை தான் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து கொண்டிருப்பாராம். இந்தப் பெண் கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லையே என்று சோகத்தில் பகத் பாஸில் இருந்த சமயத்தில் ஒரு நாள் அவருக்கு அருகில் வந்து நஸ்ரியா தான் முதலில் வெளியே போகலாமா என கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் வெளியே போகலாமா என கேட்கும் தைரியம் பகத்திற்கு இல்லையாம். இப்படி தான் இவர்களின் காதல் மலர்ந்துள்ளது. நஸ்ரியாவின் மீது காதலில் விழுந்த பகத் தன்னுடைய கைப்பட காதல் கடிதத்தை எழுதி அதனுடன் ஒரு மோதிரத்தையும் சேர்த்து கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் நஸ்ரியாவும் சம்மதம் கூறவில்லையாம். அதற்கு மாறாக வேண்டாம் என்று சொல்லாமல் இருந்ததே பகத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கையான விஷயமாகவும் இருந்துள்ளது. தமிழிலும், மலையாளத்திலும் படும் பிஸியாக நடித்து வந்த நஸ்ரியா நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் மூலமாக தனி ரசிகர் பட்டாளத்தை தமிழிலும் பெற்றிருந்தார்.

மேலும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த நஸ்ரியாவிற்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணத்திற்கு பின் நடிப்பதற்கு நஸ்ரியா ஓய்வு கொடுத்துள்ளார். இந்த நிலையில் பாஷிலுக்கும் நஸ்ரியாவுக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் 2018 ஆம் வருடம் முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் நஸ்ரியா மீண்டும் பழையபடி ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Categories

Tech |