Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் உத்தமர்கள்…. இரவில் கொள்ளையர்கள்…

சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்துக்கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரவாயில் அருகே இரவில் இரு சக்கர வாகனத்தில்  சென்று கொண்டு இருந்த சுரேஷ் என்பவரை வழிமறித்து மூன்று பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,500 ரூபாயை பறித்துள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கி பிடித்து சரமாரியாகத் தாக்கி பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் பூந்தமல்லி சேர்ந்த ஜெயராஜ், யூசுப்  மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம், 2 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள். இந்த மூன்று பேரும் பூந்தமல்லியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில் வேலை பார்த்து வருவதும் இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |