பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பகல் நேரத்தில் தூங்குவது வழக்கம். அவ்வாறு பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது உற்சாகமூட்டும். ஆனால் அதுவே 40 நிமிடங்களுக்கு அதிகமானால் ஆயுளைக் குறைத்து விடும் என்கின்றனர் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆய்வாளர்கள். பகலில் நீண்ட நேரம் தூங்கினால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் விளைவாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனால் நோய்கள் அதிகரித்து ஆயுள் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டவர்களின் தரவுகளின் ஆராய்ந்து இது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் பகல் நேரத்தில் தூங்குவதை குறைத்துக் கொண்டால் அது உங்கள் வாழ் நாளுக்கு நல்லது.