Categories
லைப் ஸ்டைல்

பகலில் தூங்குபவரா நீங்கள்?… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

நமது உடல் நாள் முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வையும் அடுத்தநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது தூக்கம்தான். ஆனால், இரவு நேரத்தில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்குவதனால் உடல் எடை அதிகரிக்கும், உடலின் செயல்பாடுகள் மாறும் என பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்க்கலாம்.

தூக்கத்தின் நிலையை மூன்று விதங்களாகப் பிரித்துள்ளனர். முதலில் மந்தமான தூக்க நிலை. இதில் லேசான சத்தம் கேட்டால் கூட முழித்துவிடுவோம். மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும்.
அடுத்ததாக கனவு நிலை. இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும் .இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து எழும்பொழுது தடுமாற்றம் ஏற்படும் அல்லது அதிகம் தூங்கியது போன்ற உணர்வு ஏற்படும்.

மூன்றாவது ஆழமான தூக்கத்தில் இருந்தாலும் சிறு அசைவு அல்லது எழுப்பினால் உடனடியாக எழுந்துவிடுவது. இதில் எந்த நிலை தூக்கமாகினும் இரவு நேரங்களில் சரியாக 8 மணி நேரம் தூங்குவதே உடலுக்கு சிறந்தது. ஆனால், தற்போது பணிச்சுமைக் காரணமாக பலருக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. குறிப்பாக மூளைக்கு அதிக வேலைக் கொடுப்பவர்களுக்கு பகலில் சற்று ஓய்வு தேவைப்படுகிறது.

இதுதொடர்பாக நடைபெற்ற தொடர் ஆய்வில், பகலில் குட்டித் தூக்கம் போடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது. பகல் நேரத்தில் குறுகிய நேரம் தூக்கம் எடுத்துக் கொள்பவர்களின் மூளையின் செயல் ஆற்றல் சிறப்பாக அதிகரிக்கிறதாம். ஏனென்றால் தூங்கும் பொழுது மூளை போதிய ஓய்வு எடுத்துக்கொண்டு கொள்கிறது. எப்பொழுதுமே தூங்கி எழும் பொழுது மூளை ஒரு வித உற்சாக உணர்வினை உணரும். இதனால் ஓய்வு தேவைப்படும் சமயத்தில் சிறிது நேரம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மூளைக்கு ஓய்வுக் கொடுக்க தூங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |