நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நாக்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 29ஆம் தேதி தினசரி மார்க்கெட், ஊடகங்கள் மற்றும் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோழி, ஆட்டு இறைச்சி, காய்கறி கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் பகல் 1 மணிவரை மட்டுமே திறக்கவும், 22 முதல் 29ம் தேதி வரை மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.