Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பகவதி அம்மன் கோவில்” நடைபெற்ற வாஸ்து நிகழ்ச்சி…. கோவில் நிர்வாகிகளின் தகவல்….!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் கோவிலின் கருவறை மேற்கூரைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரைகள் அமைத்து தேவப்பிரசன்னம் பார்த்து முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. அதன்பின் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுசீந்திரம் பிரதீபன் நம்பூதிரி கோவிலில் வாஸ்து பார்த்துள்ளார். இந்த கோவில் கருவறை கட்டிடத்தின் நீளம், அகலம், அளவுகள் அளந்து குறிக்கப்பட்டது.

இதில் கோவில் தந்திரி சங்கர நாராயணன் அய்யர், திருவனந்தபுரம் ஜோதிடர் ராஜேஷ், கோவில் ஸ்ரீகாரியம் மோகன்குமார், இந்து முன்னணி, இந்து கோவில் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். எனவே வாஸ்து அறிக்கை ஒருவாரத்திற்குள் சுசீந்திரம் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கபடும் என்று நிபுணர் பிரதீபன் நம்பூதிரி தெரிவித்துள்ளார். இவ்வாறு வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆரூடம் பார்க்கப்படும். இதனைத்தொடர்ந்து ஆரூட அறிக்கை அடிப்படையில் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் நடைபெறும்.

Categories

Tech |