அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு டாவோஸ் மாநாட்டிற்கு ஆன்லைன் மூலம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள்.
அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் தங்களுக்கு கூடுதல் வரியை விதிக்குமாறு ஆன்லைன் மூலம் உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள்.
இந்த கடிதத்தை அவர்கள் வறுமை மற்றும் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தற்போது தங்களுக்கு விதிக்கப்படும் வரி நியாயமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி தற்போதைய வரி விதிப்பு முறை தங்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கும் வகையில் தான் உள்ளது என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்கள்.
இந்த கூடுதல் வரி விதிப்பின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 187 லட்சம் கோடி ரூபாயை வைத்து கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.