Categories
தேசிய செய்திகள்

பகீர்….! இடுகாட்டில் கேட்ட அழுகுரல்…. பேய் என்ன நினைத்து பார்த்த மக்கள்…. அங்கு இருந்தது என்ன?….!!!

பீகார் மாநில சரண் மாவட்டத்தில் உள்ள மர்ஹா நதிக்கரையோரத்தில் உள்ள இடுகாட்டில் பெண்ணின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனை கேட்ட கிராம மக்கள் பேயாக இருக்குமோ என்ற அச்சத்தில் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு உயிரோடு ஒரு குழந்தை புதுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு குழந்தை அங்கு உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக மண்ணை அகற்றி குழந்தையை மீட்டு உயிரை காப்பாற்றினர். இது குறித்து காவல்துறையினர் கூறியது, அந்த இடுகாட்டுக்கு அருகில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அழுகுரல் கேட்டுள்ளது. அதனை அவர் பேயின் குரல் என்று நினைத்து கிராமத்துக்குள் ஓடி சென்று நடந்ததை கூறியுள்ளார். உடனே கிராம மக்கள் திரண்டு இடுகாட்டுக்கு வந்து பார்த்தபோது உயிரோடு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்தை கண்டறிந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அனைவரும் ஒன்றிணைந்து மண்ணை அகற்றி பார்த்த போது அங்கே வாயில் களிமண் வைத்து மூடப்பட்டிருந்த நிலையில் 3 வயது குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டிருந்தது கண்டனர். உடனடியாக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையிடம் விசாரத்த போது குழந்தையின் பெயர் லாலி என்று பெற்றோர் ராஜு சர்மா- ரேகா சர்மா என்று கூறியுள்ளது. ஆனால் தனது ஊரின் பெயர் தெரியவில்லை . இதனையடுத்து தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து குழந்தையிடம் கேட்டபோது, தன்னை தனது தாயும் பாட்டியும் இந்த இடுகாட்டுக்கு கொண்டு வந்து குழி தோண்டி புதைத்ததாகவும், அப்போது தான் அதிகமாக சத்தம் போட்டதால் களிமண்ணை எடுத்து வாயில் வைத்து முடி குழிக்குள் தள்ளி புதைத்ததாகவும் கூறியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் பெற்றோரை தேடி வருகிறார்கள்.

Categories

Tech |