பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபரான சதன்லால் தனக்கு சொந்தமான பருத்தி மற்றும் மாவுமில்லை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மர்ம நபர்களால் சதன்லால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஏராளமானோர் இந்த கொலை சம்பவத்திற்கு தஹார் பிரிவினர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கைது செய்துள்ளார்கள். இதற்கிடையே இவர் கொல்லப்பட்டதற்கு நிலத்தகராறு தான் காரணமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.