பிரபல நாட்டில் பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ரிசால் மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று டனாய் நகரில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று அதேபகுதியில் அமைந்துள்ள ஆற்றை கடக்க முயன்றுள்ளது. அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகளை மீட்க முயன்றனர். ஆனால் அதில் 8 பயணிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.