உஸ்பெகிஸ்தானில் பெற்ற குழந்தையை தூக்கி வனவிலங்கு பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றில் வீசிய தாயை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
உஸ்பெகிஸ்தானில் வனவிலங்கு பூங்கா ஒன்றுள்ளது. இந்த பூங்காவிற்கு குழந்தையுடன் தாய் ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த தாய் பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றுக்குள் தனது குழந்தையை வீசியுள்ளார்.
இதனையடுத்து குகைக்குள் இருந்த கரடி தனக்கு இறை தான் போடப்பட்டுள்ளது என நினைத்து குழந்தையை நோக்கி விரைவாக ஓடி வந்துள்ளது. ஆனால் அந்த கரடி குழந்தையை கடிக்காமல் மோப்பம் மட்டும் பிடித்துக் கொண்டே இருந்துள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்திய பூங்கா ஊழியர்கள் உடனே கரடியை கூண்டிற்குள் அடைத்து விட்டு அங்கிருந்த குழந்தையை மீட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் அங்கிருந்த வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் குழந்தையை கரடி குகைக்குள் வீசிய தாயை அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.