ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 8 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படும் நிலையில் போரின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தை சரிந்தது. மேலும் இதனுடன் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையாளர்கள் இழப்பை தடுக்க மார்ச் 16 ஆம் தேதிக்குள் லிட்டருக்கு ரூபாய் 12 அளவுக்கு விலை உயர்த்த வேண்டி இருக்கும் என்று ஐசிஐசி அறிக்கை மதிப்பிட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 ஆக உயர்ந்து இன்று 111 டாலராக உள்ளது. ஆகவே தேர்தல் முடிந்தவுடனேயே விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.