ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள பஞ்சலிக்கபுரம் நேதாஜி வீதியில் ரகுநாதன்(30) என்பவர். வசித்து வருகிறார் இவருடைய மனைவி திவ்யா பாரதி(28). இந்த தம்பதிக்கு 3 வயதில் புகழ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதி நேற்று முன்தினம் காலை வீட்டு வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள புதரிலிருந்து கோதுமை நாகப்பாம்பு ஒன்று அங்கு திடீரென ஊர்ந்து வந்தது. அதன் பிறகு அந்த பாம்பு திவ்யபாரதி வலது கையில் கடித்துவிட்டு வேகமாக ஊர்ந்து சென்ற மறைந்து விட்டது. இதில் அவரது கையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததனால் வலியால் அவர் அலறி துடைத்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த ரகுநாதன் ஓடி வந்தார்.
அதன் பிறகு அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக கணபதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு திவ்ய பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து பாம்பு பிடி வீரர் நஞ்சை ஊத்துக்குளி சேர்ந்த யுவராஜுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு அங்கு வந்த அவர் பாம்பை தேடிப் பார்த்தனர். அப்போது வீட்டு முன் உள்ள ஒரு கல்லுக்கு அடியில் பாம்பு சுருண்ட படி கிடந்தது. உடனே யுவராஜ் அந்த பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது பாம்பு படம் எடுத்து ஆடியது. சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். இது குறித்து கூறிய, பிடிபட்டது சுமார் 5 அடி நீளம் உள்ள கோதுமை நாகப்பாம்பு என்று கூறினார். மேலும் அந்தப் பாம்பை ஒரு பையில் போட்டு அறச்சலூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.