அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களோடு பிணமாக கிடந்தார்.
மேலும் 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வருவதை அறிந்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.