Categories
உலக செய்திகள்

பகீர்!…..பிரபல நாட்டில் பள்ளி அருகில் திடீர் துப்பாக்கிச்சூடு….. 4 சிறுவர்கள் படுகாயம்….. பயங்கர சம்பவம்….!!!

அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகில் ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் காரில் வந்த மர்மநபர் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டார். அதன்பிறகு அவர் வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சிறுவன் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |