கோவை மாவட்டம் வால்பாறையில் பாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கெஜமுடி எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் தோட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இவர் வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முத்துமாரி குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியல் அறையிலில் தண்ணீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து குளிக்க சென்ற முத்துமாரி ஹீட்டரை ஆஃப் பண்ணாமல் தண்ணீர் சூடாகி விட்டதா என பார்ப்பதற்காக கையை பாத்திரத்தில் விட்டு உள்ளார்.
அப்போது அவரை மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு மயங்கி நிலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு பாபு அங்கு சென்று அவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் பாபுவை மீட்டு சிகிச்சைக்காக மூடிஸ் எஸ்டேட் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் முத்துமாரி உடலை உடற்கூறு பரிசோதனைக்காக வால்பாறை ஆஸ்பத்திரி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.