கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிளியனுர் ஊராட்சி பழைய ஓரத்தூர் கிராமத்தில் மச்சகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி வாசுகி(40). இவர் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டைக்கு சென்றார். அப்போது நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள தென்னை மரத்தின் மட்டை ஒன்று மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின்சார வயர் மீது விழுந்ததினால் அந்த மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை பார்க்காமல் சென்ற வாசுகி எதிர்பாராத விதமாக அந்த மின் வயிரை மிதித்துள்ளார்.
இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே வாசுகியை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் பதிவு செய்து, வாசுகியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சிதம்பரனார் காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.