அசாம் மாநிலத்தில் திப்ரூகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஆனந்தகுமார் என்ற மாணவர் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவர் திடீரென விடுதியில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரில் தன்னுடைய மகன் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருப்பதாக கூறியுள்ளனர். அதாவது மாணவருக்கு ராகிங் தொல்லை கொடுத்த 5 மாணவர்களின் மீதும் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நிரஞ்சன் தாக்குர் என்பவரை மற்றும் கைது செய்துள்ளனர். இது தவிர 3 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் வலை வீசி தேடி வரும் நிலையில், மாணவரின் உடல்நலம் தற்போது தேதி வருவதாகவும் குற்றவாளிகள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் திப்ரூகார் மாவட்ட எஸ்பி கூறியுள்ளார். மேலும் ராகிங் தொல்லையால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.