Categories
மாநில செய்திகள்

பகீர் வீடியோ!…. இதுக்கா இப்படி சண்டை போட்டீங்க?…. சொட்ட சொட்ட வழிந்த ரத்தம்…. ஓடும் ரயிலில் பரபரப்பு…!!!!

மும்பை புற நகர் ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு போகும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கும் ஏற்ற அடிப்படையில் உள்ளதால், உள்ளூர் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை புற நகர் ரயிலில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த இந்த வீடியோவில், ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மத்தியில் அடிதடி சண்டை நடைபெறுகிறது.

அவற்றில் 3 பெண்கள் ஒருவருக்கொருவர் முடியை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கும் சம்பவம் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் கூறியதாவது, டர்பே ரயில் நிலையம் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, இருக்கை குறித்த பிரச்சனை ஏற்பட்டு 3 பெண் பயணிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் வாக்குவாதமானது மோதலுக்கு வழிவகுத்தது. அதுமட்டுமின்றி அங்கிருந்த பல்வேறு பெண்களும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் இவ்விவகாரம் பெரும் சண்டையாக மாறியது என்று கூறினார்.

இதனிடையில் பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளை விட்டு சண்டை போடும் இடத்திலிருந்து பாதுகாப்பிற்காக வேறு இடத்திற்கு நகர்வதை வீடியோவில் காணலாம். பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையை தீர்த்துவைக்க, அங்கு இருந்த பெண் காவலர் முயற்சித்தார். அப்போது சண்டை போட்ட பெண் ஒருவர் தாக்கியதில், அப்பெண் போலீசாரும் காயமடைந்தார். இச்சம்பவத்தில் அந்த பெண் காவலர் உட்பட 3 பெண்கள் காயமடைந்தனர். அதில் 2 பெண்பயணிகளின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுவதைக் காணலாம்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் இதுகுறித்து கூறியிருப்பதாவது “டர்பே நிலையத்தில் ஒரு இருக்கை காலியாக இருந்து இருக்கிறது. ஆகவே காலியான இருக்கையின் அருகில் இருந்த ​​ஒரு பெண் பயணி, வேறு பெண்ணை அழைத்து இருக்கையில் அமரவைக்க முயன்றார். இந்நிலையில் 3வதாக ஒரு பெண்ணும் அதே இருக்கையில் அமர முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக அந்த 2 பெண்களும் 3வது பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அத்துடன் பல பெண்களும் சண்டையில் ஈடுபட்டதால் ரயில் பெட்டியில் பரபரப்பு நிலவியது” என்று கூறினார்.

Categories

Tech |