சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.
அந்த வீடியோவில் வீட்டின் கதவு இடுக்கிலிருந்து ஒரு பாம்பு வெளியே தலையை நீட்டிகொண்டிருக்கிறது. அப்போது அந்த பாம்பு திடீரென்று வீடியோ எடுக்கும் நபரை தாக்க முயற்சிக்கிறது. இருப்பினும் அவர் சற்று தொலைவில் நின்றபடி வீடியோவை பதிவுசெய்துள்ளார். வீட்டின் மற்றொருபுறம் நின்ற ஒரு பெண் இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார். இவ்வாறு வீட்டு வாசலில் பாம்பு ஒன்று எட்டி பார்க்கும் இந்த வீடியோவானது நெட்டிசன்களை மிரட்டி உள்ளது.
https://twitter.com/TheFigen_/status/1607423620543913986?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1607423620543913986%7Ctwgr%5E84138e8c75d8d8aaa0c764d4a8f6338aecda9d5b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fwithout-ringing-the-doorbell-the-snake-peeked-out-of-the-door-866520