மத்திய பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்து சீதாப்பூர் மற்றும் உபரியா கிராமங்களுக்கு இடையே நிகழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியது, தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் சிருலா பகுதியில் உள்ள சுங்க சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆதார் அட்டை அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.