12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப் பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் 5000 சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் படிப்படியாக உயர்த்தி கடைசியாக 2020 ஆம் ஆண்டு பத்தாயிரம் சம்பளம் ஆக உயர்த்தப்பட்டது.
அதோடு காலி பணியிடங்களும் 4000 ஆகிவிட்டது. இதனால் 12 ஆயிரம் பேர் பணியில் இருக்கிறார்கள். தற்போது இவர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக கடந்த 10 ஆண்டுகளாகளில் கோரிக்கை வைத்து வருகிறது. திமுக 505 தேர்தல் வாக்குறுதியில் 181ஆவது வாக்குறுதியாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது இடம்பெற்றுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி தர்மபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை பகுதி நேர ஆசிரியர்களிடத்தில் நேருக்குநேர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்து விடுவேன் என உறுதியளித்துள்ளார்.
இதுபற்றி பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் திமுக ஆட்சிக்கு வந்த முதல் பட்ஜெட் அறிவிப்பில் பணி நிரந்தரம் இடம்பெறும் என பகுதி நேர ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் அறிவிப்பு இல்லாமல் போனது. இதனையடுத்து இந்த இரண்டாவது பட்ஜெட் டை நம்பியிருக்கிறோம் பணி நிரந்தரம் நம்பியே வாழும் 12 ஆயிரம் குடும்பங்கள் வேதனை குரலில் மாண்புமிகு முதல்வர் தீர்த்து வைக்க வேண்டும்.மேலும் சட்டசபையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக கோமேதக எம்எல்ஏ ஈஸ்வரன், எம்எல்ஏ வேல்முருகன் போன்றோர் இரண்டு முறை பேசியிருக்கின்றனர்.சட்டசபையில் 6-1-2022 அன்று பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் தேர்தல் அறிக்கைபடி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என கூறியுள்ளார்.
இதை செயல்படுத்த வேண்டும். பள்ளிக்கல்விக்கு ஒதுக்கிய 37ஆயிரம் கோடியில் 300 கோடி இந்த 12ஆயிரம் பேரை நிரந்தரம் செய்ய போதுமானது. 11 ஆண்டாக 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் பரிதவிக்கிறது. இதை முதல்வர் நிச்சயமாக அறிந்திருப்பார். எனவே,110 அறிவிப்பு செய்து, பணிநிரந்தரம் செய்து விடியல் தர வேண்டுகிறோம்” என கூறியுள்ளார்.