Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று இணைய வழியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் கலந்தாய்வு தற்போது டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் முதலில் மாவட்டத்திற்குள்ளும் அதன் பிறகு மாவட்டம் விட்டு மாவட்டமும் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் பணியில் சேர்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |