சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தொகுதியில் ஏற்கனவே எங்களுடைய நிர்வாகிகள் பணிகளை தொடங்கிவிட்டார்கள். தேர்தல் பிரசார பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தாராபுரத்தில் எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. பழனி முருகன் இருக்கிற பக்கத்து தொகுதி தாராபுரம், எங்களுடைய வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழகத்தில் கிடைத்த வெற்றியானது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும்.
அது தாராபுரத்தில் இருந்து… பழனிக்கு பக்கத்துல இருக்கிறனால தாராபுரத்தில் இருந்து வரும். அதே மாதிரி மருதமலைக்கு பக்கத்துல இருந்து கோயம்புத்தூர் தெற்கு…. அதே மாதிரி திருச்செந்தூர் பக்கத்துல இருந்து திருநெல்வேலி…. என நாங்கள் சட்டசபைக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் நாங்க தேர்தல் பொறுப்பாளர்கள் போட்டு இருந்தோம். தேர்தல் பொறுப்பாளர் என்பது தொகுதியை தயார் செய்வதற்கான பணி.
அதுல ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேர்தல் பண்ணி ஒதுக்கப்பட்டது. அதில் சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்கும் போது வேற தொகுதிக்கு போறோம். கு.க செல்வம் நான் தேர்தலில் நிற்கவில்லை. நான் பிறகு பார்த்துக்கிறேன் என சொல்லிட்டாரு.திமுக சட்டமன்ற உறுப்பினர் பாஜகவில் இணையம் மூலமாக நேற்றைக்கே இணைந்திருக்கிறார்.
அவருடைய பலம், அவர் ஏற்கனவே சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர், பிரபல மருத்துவர், அதே போல அந்த பகுதியில் இருக்குற பெரிய சமுதாயத்தை சார்ந்தவர். அதையெல்லாம் பார்த்து தான் அவரை தேசிய தலைமையில் தேர்வு செய்திருக்கின்றது என எல்.முருகன் கூறினார்.