மதுரையில் கட்டிட தொழிலாளியை அரிவாளால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நந்தினி குமார் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கட்டிடத்தில் வைத்திருந்த கட்டட சாமான்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் நந்தினிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இந்நிலையில் நந்தினி குமார் கூச்சலிட்டு கத்தியதால் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததை பார்த்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள். இருப்பினும் நந்தினிகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நந்தினிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.