கிணற்றில் கிழுந்து உயிரிழந்து மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கராஜ கோட்டை கிராமத்தில் நாராயணராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராமம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலை இருந்த ராமம்மாள் நேற்று சாப்பிட்டுவிட்டு பக்கத்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ராமம்மாள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ராமம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ராமம்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை யாராவது கொலை செய்து விட்டார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.