ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்டு – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே, பல்கேரியா, அயர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் வரும் மார்ச் 29ம் தேதி வரை ஆக்ஸ்போர்ட் – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக தகவல் வெளியானதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நார்வேயில் ஆக்ஸ்போர்ட் – அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட முதியவருக்கு ரத்தம் உறைந்ததாக தகவல் வெளியானதால் ஐரோப்பிய நாடுகள் இந்த தடை விதித்துள்ளது.
ஆனால் ரத்தம் உறைதலுக்கும், தடுப்பூசிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஐரோப்பிய மருத்துவ ஆணையம் இரத்தம் உறைதல் குறித்து மேற்கொண்ட ஆய்வில் தடுப்பூசியின் நன்மைகள் அதன் அபாயங்களை விட அதிகம் என தெரிவித்துள்ளது.