Categories
சினிமா

பக்காவா ஸ்கெட்ச் போட்டா போனிகபூர்….!! விரைவில் ரிலீசாகவிருக்கும் வலிமை…!!

வலிமை திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வினோத் மற்றும் அஜித்குமார் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. வலிமை திரைப்படத்தில் பாலிவுட் நடிகை சீமா குரோஷி அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வினோத் மற்றும் அஜித்குமார் கூட்டணிக்கு இரண்டாவது திரைப்படம் ஆகும் ஏற்கனவே நேர்கொண்டபார்வை என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து வலிமை திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி இருந்ததை தொடர்ந்து தற்போது படக்குழு அதற்கான விடையை கூறியுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்வு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளதால் மார்ச் மாதத்தில் வலிமை திரைப்படம் வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |