குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கிராமத்து பெண் கெட்டப்பில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தர்ஷா குப்தா தற்போது ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
💛💚❤எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது❤💚💛 pic.twitter.com/hoNS22Q9jL— ❤️Dharsha❤️ (@DharshaGupta) June 21, 2021
மேலும் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு அளித்து உதவி செய்தார். இதைத் தொடர்ந்து சில அறக்கட்டளைகள் மூலம் இவர் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் தர்ஷா குப்தா கிராமத்து பெண் கெட்டப்பில் இருக்கும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .