பின்லாந்து நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்தக்கூடிய அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் இலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல களைச் சேர்ந்த மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. தடுப்பூசிகள் இந்தியா ரஷ்யா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரித்து வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கொரோனா எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய தடுப்பூசி நிறுவனமாகும்.
மேலும் பல நாடுகள் இந்த தடுப்பு ஊசியை பயன்படுத்துவதால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக தடைவிதித்து வரும் நிலையில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் செயல்திறன் மிக்கது என்றும் உலக சுகாதார அமைப்பும் ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையமும் அறிவித்தது. இந்நிலையில் ஜெர்மனி ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகளில் மக்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியது .
இதனை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பின்லாந்து நாட்டில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயன்படுத்திய மக்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டதால் அந்நாட்டு அரசு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் பயன்பாட்டை தற்போது நிறுத்தி வைத்துள்ளது. மேலும் மருத்துவர் குறித்து ஆய்வு வருவதற்கு ஒரு வார காலமாகும் என்பதால் அதுவரை மட்டுமே தடுப்பூசி பின்லாந்து நாட்டு மக்களுக்கு செலுத்தாமல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது