பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு மின்தூக்கி வசதி செய்து கொடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன் திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள மன்மதன் கோவிலை சீரமைக்க வேண்டும் எனவும், புகழ்பெற்ற சூரியனார் கோவில் உட்பட சில கோவில்களில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக பன்னடுக்கு சுற்றுலா மாளிகை கட்டித் தரவேண்டும் என கூறினார். இதற்கு அமைச்சர் சேகர் பாபு மன்மதன் கோவில் ஆதிவாசி மக்களால் நடத்தப்படும் சிறிய கோவில் ஆகும். இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. அதன்பிறகு பழமையான கோவில்களை கணக்கெடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கோவில்களை புனரமைப்பதற்காக பொதுவான நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகன அறிவிப்பு மானிய கோரிக்கையின் போது வெளியாகும். மன்மதன் கோவிலுக்கு நிதி இல்லை. நன்கொடையாளர்ளின் உதவியுடன் சீரமைக்கப்படும் என்றார்.
இதனையடுத்து அ.தி.மு.க உதயகுமார் மதுரை சித்திரை திருவிழாவின் போது அ.தி.மு.கவினர் பாதுகாப்பு நடவடிக்கை, மருத்துவ வசதி ஆய்வுக் கூட்டம் என நடத்தப்பட்டு மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வருட சித்திரை திருவிழாவிற்கு அரசு செய்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு கேட்டார். இந்தக் கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு, மருத்துவ அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர் ஆகியோர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தி திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர் என்றார். அதன்பிறகு மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலை முருகன் கோவிலுக்கு வரும் முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுகின்றனர். இதற்காக அரசு மின்தூக்கி வசதி செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறினார். இதற்கு அமைச்சர் சுவாமிமலை முருகன் கோவிலில் மின்தூக்கி வசதி அமைக்கப்படும் என்றார்.