Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு அனுமதியில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 29 முதல் செப்-8 வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட தங்கும் விடுதி ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர்-8 வரை திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |