திருப்பதி தேவஸ்தானம் சோதனை சாவடிகளில் வாகன கட்டணங்களை உயர்த்தி உள்ளதால் பக்தர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
திருமலைக்கு செல்லும் அனைத்து பக்தர்களும் மலையின் அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனை சாவடியை கடந்து செல்லவேண்டும். இதற்கு முன் அந்த சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு ரூ. 15 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலித்து வந்த தேவஸ்தானம் தற்போது ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி இந்த சோதனை சாவடியை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு இரண்டு ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், சரக்கு வாகனங்களுக்கு 100 ரூபாயும், பேருந்துகளுக்கு 200 ரூபாயும் வசூலிக்கப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.