தமிழகத்திற்கு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. தற்போது ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையவழி முன்பதிவு அனுமதிச்சீட்டு உள்ளோர் மட்டும் மழை பழனி மலைக்கோயிலில் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இணையவழி பதிவு செய்யாதவர்கள் நேரில் வந்தால் பதிவு செய்தவர்கள் வராத பட்சத்தில் அனுமதிக்கப்படுவர். முருகன் தரிசனத்திற்கு palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் 04545-242683 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.